எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுடன் பெற்றுத்தரப்படும் – நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, August 4th, 2021

எந்த சூழ்நிலையிலும் நெடுந்தீவின் கடற்பரப்பில் மக்களுக்கான போக்குவரத்து பணியை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்ட குமுதினி படகைப்போன்ற மற்றுமொரு படகை கட்டுமாணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவதாக தெரிவித்துள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழல் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தற்போது பழுதடைந்த நிலையில் செவையை முன்னெடுக்க முடியாது தரித்து நிற்கும் குமுதினி படகையும் மீள் திருத்தம் செய்து விரையில் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நெடுந்தீவு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக்’ கட்சியின்  முக்கியஸ்தர்கள் குறித்த பிரதேசத்தின் பல்வேறு சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இதன்போது நெடுந்தீவுக்கான போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு குறித்த பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களால் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தொலைபேசியூடாக தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த மக்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலல் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்பரப்புக்கு ஏற்ற ஏதுநிலைகளுடன் கூடியதும் குமுதினி படகை ஒத்ததுமான மற்றொரு படகினை கட்டுமாணம் செய்வதே இப்பகுதியின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பது எனது விருப்பம். இதை இப்பிரதேசத்தின் முன்னாள் தவிசாளர் அமரர் அரியநாயகமும் என்னிடம் பலமுறை வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் விரைவில் துறைசார் தரப்பினருடன் பேசி குமதினி படகை ஒத்ததான நவீன வசதிகளுடன் கூடிய படகொன்றை கட்டுமாணம் செய்து தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்..

அதேநேரம் தற்போது பழுதடைந்துள்ள குமுதினி படகை துரிதகதியில் முழுமையாக திருத்தியமைத்து சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் துறைசார் தரப்பினருக்கும் பணித்துள்ளேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் வடதாரகை, குமுதினி, மற்றும் நெடுந்தாரகை ஆகிய அரச படகுகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருத்தவேலைகள் காரணமாக குமுதினிப் படகின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான கடல் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நெடுந்தீவு பல.நோ.கூ. சங்கத்தின் படகான சமுத்திர தேவாவும் திருத்த வேலைகளுக்கென அடிக்கடி கரையில் நிறுத்தப்படுகின்றது. அந்தவகையில் நெடுந்தீவுப் பயணத்திற்கென உகந்த படகுகளின்றிப் பொதுமக்கள் கஷ்டப்படும் நிலையில் மீன்பிடி வள்ளங்களில் அவசர தேவைக்காக கூடுதல் பணம் வழங்கிப் பயணிக்க வேண்டியுள்ளது.

இதனிடையே நெடுந்தீவுக்கான போக்குவரத்து சேவை நெடுந்தாரகை படகின் மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்படகு குறித்த கடலின் ஏதுநிலைகளுக்கு ஏற்றவகையில் அமையப்பெறாமையால் வருடத்தில் பல மாதங்கள் சேவையை மேற்கொள்ள முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது.

அத்துடன் ஏற்கனவே பல தடவைகள் திருத்தவேலைகளால் சேவையிலீடுபடுத்த முடியாத நிலையில் இருந்த குமுதினிப் படகினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகள் மேற்கொண்டு நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை தடைப்பதாது மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவித்த குறித்த பிரதேச மக்கள் தற்போது மீண்டும் குமுதினி பயணிகள் படகும் பழுதடைந்துள்ள நிலையில் சில வாரங்களாக நெடுந்தீவிற்கான அரச போக்குவரத்துக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குமுதினி பயணிகள் படகினை திருத்துவதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதுடன் விரையில் குமுதினி படகினை ஒத்த மற்றுமொரு பயணிகள் போக்குவரத்து படகொன்றை பெற்றுத்தருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பிரதேச மக்களிடம் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் - நாடாளும...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும் - ...
வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் - தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்...