ஊர்காவற்துறை ‘ஆரோ பிளான்ற்’ திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Friday, June 18th, 2021

ஊர்காவற்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ‘ஆரோ பிளான்ற்’ எனப்படும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தினை விரைவுபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் ஊர்காவற் துறையில் நெருஞ்சிமுனை, தம்பாட்டி, பருத்தியடைப்பு ஆகிய இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த மூன்று திட்டங்ளில் நெருஞ்சிமுனையில் குறித்த திட்டம் சிறப்பான முறையில் இயங்கி வருகின்ற நிலையில், ஏனைய இரண்டு இடங்களிலும் நன்னீராக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட பிராந்தியக் கடற்படைத் தளபதி, குறித்த திட்டம் தொடர்பான வடக்கு மாகாணப் பொறியியலாளர், ஊர்காவற் துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை பிரதேச சபைத் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி எஞ்சிய இரண்டு வேலைத் திடடங்களையும் விரைவுபடுத்துமாறு தெரிவித்தார்.

Related posts: