உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் டக்ளஸ் எம்.பிதெரிவிப்பு!

Tuesday, November 21st, 2017

நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகிவருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பல இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் நட்புறவைப் பேணும் முகமாக இணைந்தும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிராந்திய கூட்டுதொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை ஈ.பி.டி.பி முன்னெடுத்துவருகின்றது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றையதினம் (21.11.2017) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஈ.பி.டி.பியின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.

அந்தச் சந்திப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாகவும் நாட்டின் சமகால அரசியல் சூழல்நிலை தொடர்பான பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை ஈ.பி.டி.பி செய்திருப்பதாகவும் நட்புறவைப் பேணும் முகமாகசில இடங்களில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தில் இணைந்தும் பல இடங்களில் ஈ.பி.டி.பி தனது வீணைச் சின்னத்தில் தனியாகவும் போட்டியிடுவதற்கு முடியும் என்று தெரிவித்தார்.

இதேவேளை ஈ.பி.டி.பி தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடும் இடங்களில் கருத்து ஒருமைப்பாடுடைய முற்போக்குச் சக்திகளுடனும் சிறுகட்சிகளுடனும் பொது மற்றும் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து பிராந்தியக் கூட்டமைத்து போட்டியிடுவதற்கும் ஈ.பி.டி.பி தயாராக இருக்கின்றது என்றும் அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது என்றும் மேலும் தெரிவித்தார்.

Related posts:


பெண்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், இளைஞர், யுவதிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்க...
அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட...
நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்புக் கருதியும் உழைக்க முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்...