உரிய தீர்வை பெற்றுத்தாருங்கள்: டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை !

Monday, December 11th, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ் மாவட்ட கல் உடைக்கும் ஆலைகளின் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் குறித்து சந்திப்பு நடைபெற்றது.

கடந்த காலங்களில் குறித்த தொழில் துறைகளை நாம் எவ்வித நெருக்கடிகளும் இன்றி மேற்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது பல்வேறான அறிவுறுத்தல்கள் மற்றும் நியதிச் சட்டங்கள் என்ற போர்வையிலான நிபந்தனைகளினாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.

குடாநாட்டில் குறிப்பாக வலிகாம் வடக்கு பகுதியில் இற்கையாக விளையும் இக்கல்லை அகழ்வதனூடாதகவே அப்பகுதியில் விவசாயச் செய்கைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

பொதுவாக இப்பேற்பட்ட காணிகளில்தான் திராட்சை போன்ற பல பயிர்களைச் செய்து அதனூடாக அதிக வருவாயை ஈட்டிக்கொள்ளமுடியும். இந்நிலையில் கனியவளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுக்களினால் கல் அகழ்வுக்கான தடைகள் விதிக்கப்படும் அதேவேளை யாழ்.மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் உள்ளிட்ட கட்டுமாணங்களுக்காக தென்பகுதியில் இருந்த கொண்டுவரப்படும் கருங்கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக உள்ளு+ரில் கல்லூடைக்கும் தொழ்ற்றுறையை நம்பிவாழும் மூவாயிரத்திற்கும் அதிகமான நாம் பல்வேறு இடர்பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துவருவதாகவும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி உரிய தீர்வை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுத்து தரவேண்டும் என்றும் சங்க பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தன.

DSC_0276

Related posts:

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந...
தரம் - 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு - அமைச்சர் தேவாவ...

நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி...
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை - கடற்றொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அக்கறை!