உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தலுக்கு மதிப்பளித்த அரசுக்கு நன்றி –  டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 29th, 2016

யுத்தத்தினால் உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த, தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு தமிழ்மக்களின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன், உயிர்நீத்த தங்களுடைய உறவுகளை, நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளித்தமைக்காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். இதேவேளை, இலங்கை ஒலி மற்றும் ஒளிப்பரப்பு கூட்டுத்தாபங்களின் சேவைகளில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன. தேசிய கீததத்தை தமிழ் மொழியிலும் இசைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் சபையில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

321654

Related posts:

வடக்கில் தொழில் துறைகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
கடலட்டை குஞ்சுகளை பெற்றுக்கொள்தற்கு புதிய ஒழுங்கு முறை அறிமுகம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
முல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மா...