இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, October 12th, 2018

மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான ‘சர்வோதயா” அமைப்புத் திட்டம். அனைத்து மக்களுக்கும் பொருளாதார பலத்தினை ஏற்படுத்துகின்ற சோசலிச சிந்தனைக் கொண்ட திட்டம் இது.

அந்நியப் பொருட்களைத் தவிர்த்தல், கிராமங்கள் தோறும் உற்பத்தியை பரவலாக்குதல், கிராமத்தின் உற்பத்திப் பொருட்களை நாட்டு மக்களிடம் சேர்த்தல் என்பதே இத் திட்டமாகும்.

கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தி, உற்பத்தி, சந்தை மற்றும் நுகர்வை இணைக்கும் வகையில் இத்திட்டம் கட்டியெழுப்பப்பட்டது. இத்திட்டத்தில் விவசாயம் என்பது வெறுமனே தனியார் தொழிற்துறைகளாகப் பார்க்கப்படாமல், கிராம தற்சார்பு உற்பத்திகளாகப் பார்க்கப்பட்டது. இத்தகைய திட்டம் இன்று இந்த நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெறுக்கடி நிலைமையில் ஆராய்ந்து பார்க்க வேண்டியதொரு திட்டமாகும்.

இந்தத்திட்டமானது, கிராமிய கைத்தொழில்களான நெசவு, தோல் பொருட்கள், அலங்காரக் கைவினைப் பொருட்கள், மர தளபாடங்கள், படுக்கை விரிப்புகள், சங்கு, மாலைகள், வேம்பு சவர்க்காரங்கள், தேங்காய் எண்ணெய், தேங்காய்த் தும்பு கயிறுகள் என்று அனைத்துப் பொருட்களையும் ஒருங்கே இணைத்த சந்தைவாய்ப்பாக உருவாக்கப்பட்டிருந்தது.

கிராம மட்ட பொருளாதாரத்தின் வளர்ச்சியானது இந்த நாட்டின் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி இத்துறையினை வளர்த்தெடுத்தாலே போதிய ஏற்றுமதித் துறைசார்ந்த பயன்களை இந்த நாடு பெறக்கூடியதாகவும், அதிக இறக்குமதிகளை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்கும்.

குறிப்பாக ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயணக் கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, அச்சுவேலி மற்றும் வவுனியா பூந்தோட்டம் கைத்தொழிற் பேட்டைகள், வாழைச்சேனை காகித தொழிற்சாலை என பல்வேறுபட்ட கைத்தொழில்

நிறுவனங்கள் அங்கு காணப்படுகின்றன. உப்பு முதல், சீனி வரையில் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். பனை வளத்தை மேலும் மே;படுத்த முடியும். விவசாயத்தை நவினமயப்படுத்தி, அதிக பயன்களைப் பெற முடியும். பழ வகைகள் உற்பத்தியில் வெற்றிகாண முடியும்.

கடல் வளத்தை உரிய முறையில் பாதுகாத்து, நவீனமயப்படுத்தி, உரிய பயன்களைப் பெற்றால், அதுவே இந்நாட்டு எற்றுமதியில் அதிக பங்கினை ஏற்கும்.

அந்த வகையில், கண்ணுக்குப் புலப்படுகின்ற இத்துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ளாமல், இறக்குமதிக் கனவுகளில் மாத்திரம் நீங்கள் மிதந்து கொண்டிருந்தால் இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற இயலாமல் போய்விடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மறைந்த கௌரவ மகாத்மா காந்தி அவர்களது 150வது ஆண்டு ஞாபகார்த்தம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: