இந்தியத் தூதுவராலயத்தின் துணைத் துாதுவர் ராகேஸ் நடராஜன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Thursday, January 12th, 2023

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதுவராலயத்தின் துணைத் துாதுவர் ஜே.ராகேஸ் நடராஜன் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 12.01.2023

Related posts: