அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் யுவதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!
Thursday, January 28th, 2021ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை தெரிவித்து தமது நன்றியை தெரிவித்ததுடன் ஆசியினையும் பெற்றுக் கொண்டனர்
இன்றையதினம் ஊர்காவற்றுறைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார். இதன்போதே குறித்த இளைஞர் யுவதிகள் ஒன்றுதிரண்டு அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஊர்காவற்துறை சென் மேரிஸ் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது எதிர்பார்ப்புக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|