அடங்காத நாற்காலி ஆசைகளுக்காகவே இங்கு சிலர் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 11th, 2016

தமிழ் பேசும் மக்கள் நியாயமான அரசியல் தீர்வொன்றையே  விரும்புகிறார்கள். இந்த நாட்டில் சமவுரிமை பெற்ற  சுதந்திர பிரஜைகளாகவே வாழ விரும்புகிறார்கள்.

ஆனாலும் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிச்சினையாக்கி,  அதன் மூலம் எமது மக்களை உசுப்பேற்றி,  தமது அடங்காத நாற்காலிக்கனவுகளின் ஆசைகளுக்காக மட்டுமே  சிலர் இங்கு அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆகவே, பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகள்  அரசியல் தீர்வை விரும்பவில்லை என்பதற்காக  தமிழ் பேசும் மக்களும் அரசியல் தீர்வை விரும்பவில்லை  என்று அரசாங்கம் கருதி விடக்கூடாது.

பொறுப்பற்ற தமிழ் அரசியல் கட்சி தலைமைகளின்  இதுவரை கால வரலாற்று தவறுகளுக்காக  பொறுப்புள்ள ஓர் தமிழ் அரசியல் கட்சி தலைமை என்ற வகையில்
இந்த சபையின் ஊடாக பகிரங்கமாகவே எமது மன வருத்தத்தை  தெரிவிக்க விரும்புகிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts: