அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 17th, 2021

யாழ். அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலம் மற்றும மதவு அமைப்பதற்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்து கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வு இன்றையதினம் (17.3.2021) காலை நடைபெற்றது.

அச்சுவேலியில் நடைபெற்ற இந்நிகழ்வில் சரஸ்வதி வித்தியாலயத்தை இணைக்கும் உளவிக்குளம் பிள்ளையார் கோவில் பாலத்தையும் அதனோடு இணைந்த மதவையும் அமைக்கும் பணிகளை பிரதமரும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சருமான மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆசிர்வாதத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அச்சுவேலி பிரதேச சபை தவிசாளர் திரு. நிரோஷ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக மற்றும் அச்சுவேலி இணைப்பாளர் கலந்துகொண்டுருந்தனர்.

Related posts: