வடக்கிலும் தொழில்முறைசார் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவதற்கான சூழல் உருவாக்கப்படும்!

Saturday, August 22nd, 2020

வடக்கிலும் தொழில்முறைசார் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவதற்கான சூழல் உருவாக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தென்மாராட்சி வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற தென்மாராட்சி பிறீமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், விளையாட்டு என்பது உடல் உள ஆரோக்கியத்திற்கு மாத்திரமன்றி இளைஞர் யுவதிகளின் ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்ற அடிப்படையிலேயே தொடர்ச்சியாக விளையாட்டு சார் விடயங்களில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள், கிரிக்கெட் போன்ற போட்டிகளை தொழில்சார் போட்டியாக மாற்றுவதற்கான ஏதுநிலைகளை ஏற்படுத்துகின்ற போது தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்க முடியும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தன்னால் மேற்கொ்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. க...
நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி - நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...