WCL 2025: இந்தியா மறுப்பு – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

Thursday, July 31st, 2025

World Championship of Legends 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் இன்று (31) நடைபெற இருந்த ஆட்டம் இரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா விலகிய நிலையில் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளதாகவும் கூறுப்படுகின்றது

இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 18 ஆம் திகதி இந்த தொடர் தொடங்கியது. ஆகஸ்ட் 2 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா vs பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா vs தெனாபிரிக்கா அணிகள் முன்னேறின. 2 அரையிறுதி ஆட்டமும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் உடன் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர். ஏற்கனவே இந்த தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாட மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதாக கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்துள்ளனர். தேசத்தின் நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இந்திய அணி வீரர்கள் கூறியுள்ளதாக தகவல். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டார். ஹர்பஜன் சிங், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: