மின்கட்டண உயர்வுக்கு எதிரான மேன்முறையீட்டை பரசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Thursday, March 23rd, 2023

மின்கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டநீதிப்பேராணை மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, இந்த மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பரிசீலிக்க நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.

அந்த மேன்முறையீட்டு மனுவை மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவை தாக்கல் செய்திருந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், மின் கட்டணத்தை திருத்தியமைக்கும் அமைச்சரவையின் அண்மைய முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரங்களை அமைச்சரவை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: