7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தம்!

Monday, March 17th, 2025

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்றையதினம் (17)  அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை, அஞ்சல் அலுவலகத்திற்கு சேவை பெற வந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக கவலை தெரிவித்தனர்

000

Related posts: