5,000 பொலிஸாரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

Tuesday, July 8th, 2025

காவல்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,000 பொலிஸாரை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வல் இன்று (08) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் பேசிய அமைச்சர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், தற்போது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது காவல் துறையில் சுமார் 28,000 காலியிடங்கள் உள்ளன. இதனால், சுமார் 1,500 உயர் தர அதிகாரிகள் உட்பட 5,000 பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

000

Related posts: