23 முதல் வடகீழ்ப் பருவக்காற்றின் முதற் சுற்று தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் – பிரதீபராஜா!

……
வடகீழ்ப் பருவக்காற்றின் 2025/2026 க்கான முதற் சுற்று மழை எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 21 ஆம் திகதி தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும். இத்தோடு வடகீழ்ப் பருவக்காற்று உடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ்ப் பருவக்காற்றின் முதலாவது சுற்று மழை எதிர்வரும் 23 ஆம் திகதி தொடங்கும். ஆயினும் இடத்திற்கிடம் இது வேறுபடும்.
எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கும் முதற் சுற்று மழை 30 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கங்கள் பெரும்பாலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரங்களிலேயே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளன.
ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின், மாகாண நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகங்கள் போதுமான தயார்படுத்தல்கள், விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்வது சிறந்தது.
காலபோக நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இந்த மழை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
|
|