2034 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்! உறுதிப்படுத்தியது ஃபிஃபா நிர்வாகம்!
Thursday, December 12th, 2024
2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் 2030 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030 ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகக்கிண்ண T20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய்யி இடையே சந்திப்பு - இருதரப்பு ம...
சிட்வே துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!
|
|
|


