1,000 த்தை தாண்டிய உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் – தேசிய தேர்தல் ஆணைக்குழு!
Saturday, April 12th, 2025
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது.
கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடு மையங்களில் மொத்தம் 1,046 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் ஏப்ரல் 9 ஆம் திகதி, தேர்தல் சட்டங்களை மீறியதாக 98 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது வட் வரி திருத்தச் சட்டமூலம்!
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு - இலங்கையில் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என துறைசார் அமைச்சர...
எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் - பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய...
|
|
|


