ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

Sunday, September 21st, 2025


…….
துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 17 தினங்கள் நடைபெற உள்ளன.

வருடாந்த மஹோட்சவம் வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் பிரதம குருக்கள் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.

எதிர்வரும் முதலாம் திகதி புதன்கிழமை பாம்பு திருவிழாவும், இரண்டாம் திகதி வியாழக்கிழமை கம்சன்போர் திருவிழாவும், மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை வேட்டைத் திருவிழாவும், நான்காம் திகதி சனிக்கிழமை சப்பறத் திருவிழாவும்,  5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், ஆறாம் திகதி திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும்,  ஏழாம் திகதி செவ்வாய்க்கிழமை கேணித் தீர்த்த திருவிழாவும் இடம் பெற்று மாலை கொடி இறக்கமும் இடம்பெறும்.

Related posts: