தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, November 28th, 2017

உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்பில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தின் கீழான சட்டத்தரணிகள் மூவரே அதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தக்குழு உள்ளூராட்சிசபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட பின்புலங்கள் தொடர்பில் பூரணமாக ஆராயும் எனவும் அவர் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கமைய தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிசபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பில் எதிர்வரும் 4 ஆம் திகதி சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கமல்பத்மசிறி குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிசபைகள் அமைச்சு சார்பிலேயே சட்டமா அதிபர் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: