வோர்ன் – முரளி டெஸ்ட் கிரிக்கட் தொடர் – இலங்கை அணி அறிவிப்பு!

Saturday, January 25th, 2025

காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள வோர்ன் – முரளி 2025 டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதில் முதல் போட்டி 2025 ஜனவரி 29 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணி  பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனஞ்செய டி சில்வாவின் தலைமையில், பத்தும் நிசங்க, திமுத் கருணாரட்ன, தினேஸ் சந்திமல், அஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ஓசாட பெர்ணான்டோ, லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, சோனால் தினுச, பிரபாத் ஜயசூரிய, ஜெப்ரி வெண்டசே, நிசான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, அசித்த பெர்ணான்டோ, விஸ்வ பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்

000

Related posts:


சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் - பரீட...
வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் - விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் - ஐ.நா உணவு ம...