வேலணை – மண்கும்பான் பகுதி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் !

…
வேலணை மண்கும்பான் பகுதி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
வேலணை – மண்கும்பான் 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியிலேயே குறித்த சடலம் இன்று (11) கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் கரை ஒதுங்கியதை அவதானித்த மக்கள் பொலிசார் மற்றும் கிராமசேவகர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவ்விடத்துக்கு வந்த குறித்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு சட்டவைத்திய நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைத்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.
முன்பதாக ஊர்காவற்றுறை பொலிசார் பிரிவுக்குபட்பட்ட புங்குடுதீவு கடற்கரை பகுதியில்
கடந்த சனிக்கிழமை மீன்பிடி படகொன்று கரையொதுங்கியிருந்தது.
குறித்த படகு மன்னார் மாவட்டத்தை சேர்ந்தது என அடையாளம் காணபட்ட நிலையில் அப்படகில் இருவர் சென்றதாகவும் ஒருவர் கரை ஒதுங்கியதாகவும் கூறப்படும் நிலையில் குறித்த சடலம் தொடர்பில் புலன் விசாரணைகளையும்.பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
000
Related posts:
|
|