வேலணையில் வசமாக மாட்டிய வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ் நகருக்கு கொண்டு செல்ல முயன்ற திருட்டும் கும்பல்!

Tuesday, August 12th, 2025

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நயப்புடைக்கப்படு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்து.

இச்சம்பவத்தின்போது 20 வய்துடைய இளைங்ன் ஒருவனே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் –

வேலணை பிரதேசத்தில் அண்மைக் காலமாக பெறுமதிமிக்க வளர்ப்புக் கால்நடைகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வரும் நிலை காணப்படுகின்றது.

இதே நேரம் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு முறைபாடுகள் செய்தும் திட்டமிட்ட இந்த திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால் இருந்து வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் தமது கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  வேலணைக்கு வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பட்டா ரக வாகனம் ஒன்றில் 5 பேரடங்கிய திருடுக் கும்பல் ஒன்று வங்களாவடிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அவதானித்த மக்கள் குறித்த நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோட முயன்றுள்ளனர்.

நிலைமையை சுதாகரித்துக்கொண்ட மக்கள், பட்டா ரக வாகனத்தை மறித்து அதில் இருந்த ஒருவரையும் இறைச்சியாக்கப்பட்ட மாட்டுடன்
பிடித்து நயப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

ஏனைய நால்வர் தப்பியோடிய நிலையில் பொலிசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
000

Related posts: