யாழில் வாள்வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் வலைவிரிப்பு!
Saturday, February 18th, 2017
யாழில் வாள் வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பொலிஸ், விசேட குழுக்கள் என்பன களமிறக்கப்பட்ட போதும் பலனளிக்கவில்லை. எனினும், ஒரு சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். வாள்வெட்டுக் குழுக்களுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் அவர்களைத் தேடி வலைவிரித்துள்ளனர்.
சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் மேற்கொண்டு வரும் ரோந்து நடவடிக்கைக்கு விசேட அதிரடிப்படையினரும் தமது ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

Related posts:
யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா !
ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு ஐம்பது கிலோகிராம் யூரியா, உரம் ...
மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சின் முழுமையான அனுமதியை...
|
|
|
கொரோனாவால் மரணிக்கும் பெரும்பாலானோருக்கு தொற்று இருப்பதே தெரியாது - அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் த...
மக்களின் செயற்பாடுகளே கிராமங்களை முடக்குவதற்கு காரணமாக அமைகின்றது – யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் ...
நாட்டை முழுமையாக முடக்காமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – இன்று தீர்க்கமான முடிவு எட்டப்ப...


