வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை!

…….
பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையானது நேற்றையதினமும் இன்றையதினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்துடன் காணப்படுகிறது.
பச்சிலைப்பள்ளி பொது சந்தைக்கு மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் வருகை தருவது வழக்கமான விடயமாகும்.
இன்றையதினம் சந்தைக்கு வந்த மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கியை அவதானிக்க முடிந்தது.
பல காலமாக தாம் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும் தமது பிரதேசத்தில் சிறிய அளவு மழை பெய்தாலும் பொதுச் சந்தை காணப்படும் பிரதேசத்தில் தாம் தமது அன்றாட செயல்பாடுகளை தொடர முடியாத நிலை இருப்பதாகவும் வெள்ளத்தினை கட்டுப்படுத்த ஏதாவது உடனடி நடவடிக்கையை செய்து தருமாறும் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
Related posts:
அடுத்த வருடம் முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!
மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம் !
GCE O/L பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு - சீரற்ற வானிலை காரணமாக நடவடிக்கை!
|
|