வெகு சிறப்பாக நடைபெற்ற யாழ். அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் விளையாட்டு அரங்கு திறப்புவிழா!   .

Saturday, July 26th, 2025

யாழ். அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சண்முகலிங்கம் அன்னலட்சுமி ஞாபகார்த்த விளையாட்டு அரங்கு திறப்புவிழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து அரங்குக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விழக்கு ஏற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இடம்பெற்றது. பின்னர் அரங்கானது சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் கு.பாலகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு நிலை கணக்காய்வு அத்தியட்சகர் செ.சிவகுரு கலந்துகொண்டதுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

000

Related posts: