வீதி விபத்து –  கடந்த 5 வருடங்களில் 12,182 பேர் உயிரிழப்பு – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவிப்பு!

Saturday, February 1st, 2025

நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் செயலணி ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான விசேட ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: