விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!
Thursday, January 2nd, 2025
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் வழங்குகின்றதுடன், புதிய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
விடுதலை செய்ய எனக்கு அதிகாரமில்லை - அமைச்சர் சுவாமிநாதன்!
சிறப்புத் தேவையுடையவர்கள் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவர் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவ...
180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 வீதம் கட்டண அதிகரிப்பு!
|
|
|


