விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க புதிய விதிகள் – தேர்தல் ஆணைக்குழு!
Saturday, October 19th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்கெடுப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்ட விதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், விசேட தேவையுடைய வாக்காளர்களின் உதவியாளர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லாதவராக இருத்தல் வேண்டும்.
மேலும், விசேட தேவையுடைய வாக்காளர்களின் உதவியாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ, பிரதேச முகவராகவோ அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது.
விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடனழைத்துச் செல்வதற்குத் தகுதிச் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், பிரதேச செயலகங்களில், கிராம அலுவலர் அலுவலகங்களில் அல்லது www.election.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000
Related posts:
|
|
|


