வாந்தி எடுத்த நோயாளி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Sunday, February 9th, 2025
வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன் (வயது 53)என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இ.போ.சபையின் கோண்டாவில் சாலையில் சாரதியாகக் கடமையாற்றும் அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாலைக்கு வேலைக்குச் சென்றபோது தலைச்சுற்று ஏற்பட்டதன் காரணமாக வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மாலை அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை (8) யாழ். திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டா
Related posts:
வடமாகாண கல்வி அமைச்சின் வினைத்திறனின்மையால் ஒரு பாடசாலையில் இரண்டு அதிபர்கள் - ஈ.பி.டி.பி.யின் வடக்...
நிலத்தடி நீரில் ஒயில் விவகாரம் புதிய சுற்றறிக்கை நடைமுறையினால் நீர் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும்...
இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட அகத்தியர் சிலை!
|
|
|


