வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுக்க விசேட தினம் அறிவிப்பு

Saturday, October 5th, 2024

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 11ஆம் திகதி வரை 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனப் பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: