வலி மேற்கும் தமிழரசு வசம் – தவிசாளரானார் ஜெயந்தன்!

Thursday, June 19th, 2025

ஈ.பி.டி.பி. மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் வலிகாமம் மேற்கு பிரதேச சபையி ஆட்சி அதிகாரத்தையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டுள்ளது

இதனடிப்படையில் தவிசாளராக அக்கட்சியின் குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தன் தவிசாளராக தெரிவானார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும், பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (19) குறித்த பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.

முன்பதாக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 25 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் தமிழ் மக்கள் கூட்டணி 2 ஆசனத்தையும் ஐக்கியதேசிய கட்சி  மற்றும் சுயேச்சைக்குழு ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இந்நிலையில் பகிரங்க வாக்கெடுப்பை சபையின் அதிகளவான உறுப்பினர்கள் விரும்பியதன் அடிப்படையில்  குறித்த சபையின் தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயந்தன் 15 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் 7 வாக்குகளையும் வாக்குகளையும் பெற்றனர். இதனடிப்படையில் குறித்த சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவானார்.

இதேவேளை உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இலங்கேஸ்வரன்  தெரிவானார்.

000

Related posts:


பாதிக்கப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள்- சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்ல...
மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்...
வீடுகளில் பெற்றோல் சேமித்து வைப்பது ஆபத்தானது – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!