வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள 100 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள சுமார் 100 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் இணைந்தே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
அரசியலுக்கு வருகை தரும் போது சாதாரண நிலையில் இருந்த அரசியல்வாதிகள் திடீரென செல்வந்தர்களாக மாறியதைக் கருத்தில் கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அவர்களின் நெருங்கியவர்களின் பெயர்களில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த சொத்துக்கள் பெயரளவில் அவர்களின் நெருங்கியவர்களின் பெயர்களில் இருந்தாலும், அவை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளால் நிர்வகிக்கின்றமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அரசியல்வாதிகளில் கடந்த காலங்களில் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள், ஆளுநர்கள் மற்றும் பல உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
000
Related posts:
|
|