வருடாந்த இடமாற்றத்திற்குள்ளாகும் வடக்கின் பல அதிகாரிகள்!

Saturday, November 23rd, 2024

வடக்கு மாகாணத்தில் உள்ள பல பிரதேச செயலாளர்களிற்கு 2025 ஜனவரியில் இருந்து வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அலோக பண்டாராவின் 2024-11-22 திகதிய கடிதம் மூலம் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போதை கோப்பாய் பிரதேச செயலாளர் S.சிவசிறி  கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளராகவும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் ஊர்காவற்றுறை  பிரதேச செயலாளராகவும், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் எஸ்.மஞ்சுளாதேவி  கரவெட்டி பிரதேச செயலாளராகவும் இடமாற்றப்படுவதோடு கரவெட்டி பிரதேச செயலாளரான  தயாரூபன் கோப்பாய் பிரதேச செயலாளராகவும் இடமாற்றப்படுகின்றனர்.

இதேபோன்று தற்போதைய பூநகரிப் பிரதேச செயலாளரான ரி.அகிலன் வடக்கு  மாகாணசபைக்கு இடமாற்றப்படும் அதேநேரம் வடக்கு மாகாண சபையில் உள்ள வனஜா  பூநகரிப் பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: