திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு !
Saturday, February 15th, 2025
யாழில் நேற்றிரவு திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது – 59) என்ற நபரே இந்த இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் மேசன் வேலைக்காக யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதிக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.00 மணியளவில் திடீரென மயக்கமுற்றார். இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும் அங்கு வந்த நோயாளர் காவு வண்டி அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதால் திரும்பி சென்றது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் ஆதரவு தொடரும் - சீன தூதுவர் அறிவிப்பு!
இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் நாடு தீப்பற்றியிருக்கும் - நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்...
|
|
|


