50 சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி திறப்பு!
Wednesday, March 22nd, 2017
நாடு முழுவதிலும் 50 ச.தொ.ச விற்பனை நிலையங்களை திறந்துவைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமர் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 28ஆம் திகதி நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை ஒரேநாளில் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.சதொச நிறுவனத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக கணினி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்றுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
அமெரிக்க தூதுவரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ!
அனைத்து எரிபொருள் தாங்கி ஊர்திகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்...
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார ...
|
|
|
சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது - பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளர...
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளைமுதல் நாடு முழுவதும் அமுலாகும் - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வி...
இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் - சர...


