வரலாற்றில் மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்த தயார் நிலையில் ஈரான்..!
Tuesday, June 17th, 2025
ஈரான் ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலுக்கு எதிராக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மற்றும் கடுமையான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருகிறது.
இந்தத் தாக்குதல் மூலம் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இதற்கு இஸ்ரேல் எவ்வாறு இதனை தாங்கும் என்பது குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
யுத்தம் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக ஈரான் “மிகப் பெரிய தாக்குதலை” நடத்த உள்ளதாக அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலில் நெதன்யாகு பாதுகாப்பு கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அச்சுறுத்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தை நடத்தியுள்ளார்.
யுத்தம் தொடங்கிய பின்னர் ஈரான் முதல் முறையாக இத்தகைய பெரிய அளவிலான தாக்குதலை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு உத்திகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
|
|
|


