வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்!
Saturday, June 14th, 2025
யாழ். வடமராட்சி இந்து கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பவனி நிகழ்வும், வீதி நாடகமும் நேற்றுக் காலை 8:30 மணியளவில் ”பிளாஸ்டிக் மாசுப்பாட்டை முடிவுறுத்துவோம் ” எனும் தலைப்பில் பாடசாலை முன்றலில் ஆரம்பமானது
இந் நிகழ்வானது பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி பின் பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து பிரதான வீதி ஊடாக விழிப்புணர்வு பவனி பஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து vm வீதி ஊடாக மீண்டும் 10:30 மணியளவில் பாடசாலை முன்றலில் நிறைவு பெற்றது.
இவ் பவனி நிகழ்வில் பாடசாலை மாணவிகள் பிளாஸ்டிக் பாவனையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இடர்பாடுகள் தீர்வு என்பன தொடர்பான பதாகைகள் தாங்கி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி
தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் பொலிஸ் அணியினரும் பவனியில் பங்குகொண்டு பவனிக்கு அவர்களால் பாதுகாப்பும் வழங்கப்பட்டது
000
Related posts:
|
|
|


