வடக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் –   வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, September 7th, 2025


……
எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) நேற்று (7) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: