வங்காள விரிகுடாவில்ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை!

Tuesday, July 29th, 2025

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் இன்று (29) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. ஆகும்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன, எனினும், சொத்துக்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் தீபானி வீரகோன், இந்த நிலநடுக்கத்தால் இலங்கை பாதிக்கப்படவில்லை என்று கூறினார்.

இந்த நிலநடுக்கம் இலங்கையில் இருந்து சுமார் 260 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாகவும் மேலும் அதன் தீவிரம் இலங்கையில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் எனினும் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

000

Related posts: