வங்களவடி முச்சக்கர வண்டிக்களுகளால் மக்களுக்கு அசௌகரீகம் -வேலணை பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்!

……
வங்களாவடி சந்தி பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில், தூர நோக்குள்ள பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க பிரதேச சபை நடவடிக்கை எடுக வேண்டும் என வேலணை பிரதேச சபையில் வலியுறுத்தப்படது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (16) சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த முச்சக்கர வண்டிச் சேவைக்கு நிலையான தரிப்பிடம், சேவைக்கான பதிவுகள், வரி அறவீடு உள்ளிட்ட விடையங்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இதை பிரதேச சபை நடவடிகை எடுக்க வேண்டும் என உறுப்பினர் திருக்கேதீஸ்வரனால் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது உருப்பினர் மேலும் கூறுகையில் –
குறித்த பகுதியில் முச்சக்கர வண்டிகளுள்ளும், சில தற்காலிக கடைகளுக்குள்ளும் வைத்து சட்டவிரோத மதுசாரம் , விற்பனையும் செய்யப்பட்டு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுவதுடன் பொலிசாரும் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதை காண முடிகின்றது.
இதேநேரம் சிலரால் தரக்குறைவான சொற்பிரயோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.
இன்நிலையில் கடந்த காலங்களில் 30 இற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் சேவையை முன்னெடுத்ததாக கூறப்படுகின்றது.
ஆனாலும் தற்போது 10 இற்கும் உட்பட்டவர்களினால் தான், அதுவும் பகுதி நேரமாகவே உரிமையாளர்களால் குறித்த சேவை முன்னெடுக்கப் படுகின்றது.
கடந்த காலங்களை விட தற்போது மக்களின் வருகை அதிகரிப்பு, அதனால் ஏற்படும் நெருக்கமும் வேலணை நகரான வங்களாவடி சந்திப் பகுதியில் அதிகரித்துள்ளது.
குறித்த சந்திப் பகுதியில் பிரதேச சபை, தீவக மார்க்கத்தின் பிரதான எரிபொருள் நிரப்பு நிலையம், சபையின் நீண்ட கடைத் தொகுதி, பேருந்து நிலையம், தற்கலிக கடைகள், நடைபாதை என்பவற்றுடன் குறித்த முச்சக்கர வண்டிகளும் தரிப்பிடத்தைக் கொண்டு இயங்குகின்றன.
இதனால் குறித்த சந்திப் பகுதிக்கு வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதை காணமுடிகின்றது என சபையின் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், சுவாமினாதான் பிரகலாதன், கருணாகரன் நாவலன், செல்லையா பார்த்தீபன் ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் சில கடைகளுக்குள் சட்டவிரோத மதுசாரம் விற்பனை செய்யப்படுவதாக உறுப்பினரான ஆனந்தராசா சதீஸ்குமார் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் ஒரு குறுகிய நிலப்பரப்பில் குறிப்பாக வீதி அதிகார சபையின் அதிகாரத்துக்குள் இருக்கும் நிலப்பரப்பில் இந்த முச்சக்கரவண்டி தரிப்பிடம் இருப்பதால் அதற்கு நிலையான ஓர் இடத்தை வழங்கி மக்களுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒரு பொறிமுறை கொண்டுவரப்படுவது அவசியம் என்றும் இதை எமது சபை மக்களின் நலன்களில் இருந்து சாதக பாதகங்களை ஆராய்ந்து செயற்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
குறித்த விடையம் தொடர்பில் ஆராய்ந்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவிசாளர் அசோக்குமார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|