ரஷ்ய ஜனாதிபதி புடின் டிசம்பர் முதல் வாரம் இந்தியா விஜயம்!

……..
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.
புடினின் வருகைக்கு முன்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ இந்தியாவிற்கு வருகைப் புரிந்து இருதரப்பு சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விடயத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவையின் 80 ஆவது அமர்வில் உரையாடிய போது அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வணிகம், இராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செய்யறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும்.
வணிகத்தைப் பொருத்தவரை யாரையும் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளதுடன், நாட்டின் தேசிய நலன்கள் குறித்து சர்வதேச அளவில் தொடர்ந்து மோடி பேசி வருவதால் இந்தியா உடனான உயர்மட்டத் தொடர்பை எப்போதுமே ரஷ்யா விரும்புகின்றது.
இதன் ஒரு பகுதியாக புடின் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளார்.
வணிகம் மற்றும் பாதுகாப்பு என இருதரப்பு நலன்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்
000
Related posts:
|
|