சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை – அமைச்சர் நாமல் உறுதி!
Friday, September 17th, 2021
அனுராதபுரம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்றையதினம் (16) அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் உறுப்பினர்களை சந்தித்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
ஒழுக்க விழுமியங்களைப் பேணுகின்ற நாட்டைக் கட்டியெழுப்புவதே சமகால அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் எதிர்பார்ப்பாகும்.
எந்த சம்பவமாக இருந்தாலும் சமூக மற்றும் தராதரம் பாராது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்டகது..
000
Related posts:
பொதுமக்களுக்காக கிராமிய அரசாங்கம் - அமைச்சர் கஜந்த கருணாதிலக!
சமூக ஊடகங்களை பயன்படுத்தி 61 மில்லியன் ரூபா நிதி மோசடி - பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி கட்டணத்தை உடனடியாக குறைக்க முடியாது - மின்சாரக் கட்டணத்த...
|
|
|


