யுத்தத்தை நிறுத்தும் தேவை உரிய நாடுகளுக்கு இருப்பதாகத் தெரியவரவில்லை – ஆசிய நாடுகளுக்கு அரசியல் ஆய்வாளர் ரியுடர் வீரசிங்ஹ எச்சரிக்கை!
Sunday, April 5th, 2026
….
மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள யுத்தச் சூழல் மேலும் தொடருமானால் ஆசிய நாடுகளில் பாரிய அழுத்தங்கள் ஏற்படுமென அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ரியுடர் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை நிறுத்தும் தேவை உரிய நாடுகளுக்கு இருப்பதாகத் தெரியவரவில்லை எனத் தெரிவிக்கும் பேராசிரியர், இந்த நிலைமையில் ஆசிய நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கும் அவர்,
யுத்தம் காரணமாக இதுவரையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் நிலைமைகளைப் பார்க்கின்றபோது, இத்தகைய நிலைமைகள் ஆசிய நாடுகளை பெரும் சவால்களுக்கு உட்படுத்தும்.
அந்த நாடுகளின் உள்ளக ரீதியிலான எதிர்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
ஆசிய நாடுகளின் உள்ளார்ந்து எழும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புச் செயற்பாடுகள் தீவிரமடையும். இலங்கையும் அதற்கு முகங்கொடுத்தே தீரவேண்டி வரும்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் யுத்த நிலைமையானது பொருளாதார நெருக்கடி வரையில் பயணித்துள்ளது. இது உலகளாவிய நெருக்கடியாக வளர்ச்சி பெற்றுள்ளது.
இந்த நிலை மேலும் தொடருமானால் அது, பொருளாதார வீழ்ச்சி நிலையை அடையும்.
உலகளாவிய பொருளாதாரத்தினுள் விநியோக வலையமைப்பு மற்றும் எரிசக்தி நிலையங்கள் செயற்பாடுகளை இழந்துள்ளமையால், இந்த யுத்தம் மேலும் 36 நாட்களுக்கு அப்பால் நீளுமாயின் பெரும்பாலான அழுத்தங்கள் ஆசிய நாடுகளையே தாக்கும்.
மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்யை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளாக இலங்கை, பங்களாதேஸ், சிங்கப்பூர் உட்பட்ட இந்த நாடுகளில் உள்ளக ரீதியில் நிலவுகின்ற அரசியல் எதிர்ப்பு நிலைமைகள் மேலும் தீவிரமடையும்.
அதுமட்டுமன்றி, சமூக, அரசியல் எதிர்ப்புகளும் தீவிரமடையும். இத்தகைய நிலையில் எமது நாடுகளிலும் அரச அதிகாரத்தை, ஆட்சி அதிகாரத்தை முன்னெடுப்பது என்பது பாரிய சவால்களுக்கு உட்படலாம்.
மேலும், குறித்த யுத்தம் எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படுமானல், உலக பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர 02 வருடங்களுக்கும் மேற்பட்ட காலங்கள் எடுக்கும் எனவும் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ரியுடர் வீரசிங்ஹ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


