யாழ் வலம்புரியில் கோலாகலமாக ஆரம்பமானதுகனடா கல்விக் கண்காட்சி!
Friday, May 30th, 2025
இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில்
கனடா கல்விக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வலம்புரி ஆடம்பர விடுதியில் (30) ஆரம்பமானது.
கனடா இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர
மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் – எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றும் நாளையும் இடமெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நேரம் பிற்பகல் 2.00 மணிக்கு ஜெற்வின் ஆடம்பர விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சி ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
|
|
|


