யாழ் மாநகர சபை வேட்பாளர்களை சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 4th, 2025

யாழ் மாநகர சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை சந்தித்து தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கடசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடியாடியுள்ளார்.

இதன்போது தமிழ் தேசியத்தினை பாதுகாக்கும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மாத்திரமே செயற்படுவதை சுட்டிக்காட்டியதுடன்,  எமது கட்சி பற்றி அவதூறுகளை பரப்பும் வகையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தவறான பிரசாரங்களை முறியடிக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் சரியான கருத்துக்களை தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்சி வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னேடுத்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும்,  வேட்பாளர்களினதும் கட்சி, செயற்பாட்டாளர்களினதும்  அயராத  உழைப்பு வெளிப்படுத்தப்படுமாயின், எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளிப்படுத்தினார்

000

Related posts:

வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை மேம்படுத்தவோ உருவாக்கவோ அரசு அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்பி தெரிவ...
மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் மக்களின் தோல்வி காணாத ஏக தலைவரின் பதவியேற்...
22 ஆம் திகதியன்று நடைபெறும் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க நிர்வாகத் தெரிவு கூ...

எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...