யாழ் பல்கலை கலைப் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!
Friday, March 20th, 2026
…….
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பதவியில் இருந்த கலைப்பீட பீடாதிபதியான ரகுமாராமின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.
இந்நிலையில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டவர் என்ற அடிப்படையில் நாகமுத்து பிரதீபராஜா கலைப்பீட பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் வானியல் ஆய்வுகளை துல்லியமாக கணித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
125 கோடி ரூபா செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி!
குறைவடைகிறது லிட்ரோ சமையல் எரிவாயு விலை - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் அனைத்துக்கும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிர...
|
|
|


