விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் இனி போனஸ் புள்ளி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, March 4th, 2018

விளையாட்டுத் துறையில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடுகளுக்கு பாடசாலை தவணைப் பரீட்சைகளின்போது போனஸ் புள்ளிகளை வழங்குமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களை ஆகக்குறைந்து ஒரு விளையாட்டிலாவது பங்குபற்ற செய்வதற்குரிய முன்னெடுப்பாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

இன்றைய நிலையில் மாணவர்கள் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைந்து வருகின்றது.

இதனால் மனரீதியான அழுத்தங்கள் ஏற்படுகின்றன. விளையாட்டுக்களில் ஈடுபடுவதன்மூலம் மாணவர்களுக்கு மனரீதியான அழுத்தங்கள் குறைக்கப்படும்.

எனவே உள்ளக மற்றும் வெளிக்கள விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு விளையாட்டு திறமை அடிப்படையிலேயே புள்ளியிடல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தலமைத்துவப்பண்பு, ஒருங்கிணைந்து செயற்படல், தற்துணிவு போன்ற தகமைகளைப் பெற வேண்டும் என்பதே போனஸ் புள்ளிகள் வழங்கும் திட்டத்தின் நோக்கம் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்.

Related posts: