கொள்வனவாளர்கள் பணம் வழங்குவதில்லை – கால்நடையாளர்கள் கவலை !

Wednesday, July 4th, 2018

கிளிநொச்சி அக்கராயனில் பால் கொள்வனவில் ஈடுபடுபவர்கள் ஒழுங்காக பணம் வழங்குவதில்லை என கால்நடை வளர்ப்பாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகரிலிருந்து அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளில் பால் கொள்வனவில் ஈடுபடுபவர்கள் தொடக்கத்தில் பதினைந்து நாட்களுக்கு ஒரு தடைவ பாலிற்கான பணத்தினை வழங்கினர்.

தற்போது ஒன்றரை மாதங்கள் கழித்துக் கூட பணம் வழங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைக்குரிய தீவனங்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தற்போது இப்பிரதேசத்தில் வறட்சி நிலவுவதால் கால்நடைகளை பலத்த சிரமங்களுக்கு மத்தியில் பராமரித்து பாலினை விற்பனை செய்தாலும் பால் கொள்வனவில் ஈடுபடுகின்ற நிறுவனங்களிடமிருந்து விரைவாகப் பணத்தினை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறைந்தது பதினைந்து நாட்களுக்கு ஒரு தடைவ பாலிற்குரிய பணத்தினை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால்நடையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: