யாழ் கொட்டடியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பு!…….

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது.
இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த மீட்பு பணியில் யாழ்ப்பாண பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிசார் ஆகியோர் ஈடுபட்டனர்.
000
Related posts:
வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை – ஈ...
உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை...
|
|